"என் வாழ்வில் கடைசி உணவு" குறுஞ்செய்தியால் காப்பாற்றப்பட்ட உயிர்
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் "என் வாழ்வில் கடைசி உணவு" என்று உணவினை ஓடர் செய்துவிட்டு ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் "என் வாழ்க்கையில் கடைசி உணவு" என்ற குறிப்புடன் வாடிக்கையாளர் ஒருவர் உணவினை ஓவர் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உணவினை விநியோகிப்பவர் வாடிக்கையாளரின் இடத்திற்கு சென்ற போது, வாடிக்கையாளரின் வீட்டில் அழைப்பு மணிக்கு யாரும் பதிலளிக்கவில்லை, கதவையும் திறக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த நபர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் வந்தபோதும் வாடிக்கையாளர் கதவை திறக்க மறுத்துள்ளதுடன்,மேலும், கதவை திறந்தால் ஜன்னலுக்கு வெளியே குதித்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதன் பின்னர் வாடிக்கையாளரை அமைதிப்படுத்திய தீயணைப்பு படையினர் அவரது அறைக்குள் சென்று அவரை காப்பாற்றியுள்ளனர்.
இதன்போது வாடிக்கையாளரின் உயிரைக் காப்பாற்ற உதவிய உணவு விநியோகிஸ்தருக்கு பொலஸார் நன்றிகளை தெரிவித்துள்ளதுடன்,
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி உணவு விநியோகஸ்தருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam