காட்டு யானைகளின் அட்டகாசத்தால் வாழ்வாதாரத்தை இழக்கும் கல்மடு மக்கள்
காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் வாழ்வாதாரத்தை இழக்க நேரிட்டுள்ளதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் கல்மடு பிரதேச மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கிளிநொச்சி - கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் - ரங்கன் குடியிருப்பு பகுதியில் நேற்றைய தினம் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாலை 6 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரையான காலப் பகுதியில் மக்களால் வாழ்வாதாரத்திற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த தென்னை, பலா, மரவள்ளி, வாழை போன்ற பலன் தரக்கூடிய நிலையில் உள்ள பயிர்களை தினமும் பகுதியாக சென்று காட்டு யானைகள் அழித்து வருவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
வீடு திரும்ப முடியாத அச்ச நிலை
இதன் காரணமாக வீட்டிவிருந்து மாலை 5 மணிக்கு பின்னர் வெளியிடங்களுக்குச் சென்று வீடு திரும்ப முடியாத அச்ச நிலை தோற்றியுள்ளதாகவும், வீட்டில் இருப்பவர்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலை தோற்றியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும், காட்டு யானைகள் மக்களை துரத்தி வருவதாகவும், இதன் காரணமாக இரவு வேளைகளில் நித்திரையின்றி காட்டு யானைகளுக்கு காவல் காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
[YZJQEKS ]
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |