மன்னார் பாடசாலை ஒன்றில் அதிபர் நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக ஆளுநருக்கு கடிதம்

Mannar Sri Lanka Sri Lankan Peoples
By Kajinthan Aug 11, 2026 01:36 PM GMT
Report

மன்னார் புனித சவேரியார் தேசிய பாடசாலையின் அதிபர் நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாகவும், அதிபர் சேவை அதிகாரிகளுக்கான நீதி கோருதல் தொடர்பாகவும் உருத்திரசேனை அமைப்பின் பிரதிநிதி சுஜீவன் கடிதம் ஒன்றினை வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், மன்னார் புனித சவேரியார் தேசிய பாடசாலையின் (1AB தர தேசிய பாடசாலை) அதிபர் நியமனம் தொடர்பில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்தும், அங்கு கடமையாற்றும் தகுதியான அதிகாரிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்தும் தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

பொதுவாக ஒரு தேசிய பாடசாலையில், இலங்கை அதிபர் சேவை தரம் 1ஐச் சேர்ந்த ஒருவரே அதிபராகப் பதவி வகிக்க வேண்டும். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக இலங்கை அதிபர் சேவை தரம் 3இல் உள்ள அருட்சகோதரர் சந்தியோகு என்பவர் அதிபராகப் பணியாற்றி, கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதியுடன் ஓய்வுபெற்றுள்ளார்.

பொறுப்பு வழங்கப்பட்ட அதிபர்

அவரது ஓய்வைத் தொடர்ந்து, அதே பாடசாலையில் இலங்கை அதிபர் சேவை தரம் 3இல் உள்ள தகுதியான மூவர் (யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்து மதத்தைச் சேர்ந்த இரு ஆண்கள் மற்றும் மன்னாரைச் சேர்ந்த இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்) கடமையில் உள்ளனர்.

இருப்பினும், அவர்களைப் புறக்கணித்துவிட்டு, அதே பாடசாலையில் இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3இல் கற்பிக்கும் அருட்சகோதரர் சத்தியன் என்பவருக்கு அதிபர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் பாடசாலை ஒன்றில் அதிபர் நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக ஆளுநருக்கு கடிதம் | Letter To North Governer   

வலயக் கல்விப் பணிப்பாளரின் உத்தியோகபூர்வக் கடிதம் மூலம் இந்நியமனம் வழங்கப்பட்டிருந்தாலும், இது வட மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் ரஞ்சன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இப்பாடசாலை ஒரு தேசிய பாடசாலையாக இருந்தபோதிலும், "டி லா சால்" (De La Salle) கிறிஸ்தவ மிஷனரியால் நிர்வகிக்கப்படுவதால், தகுதி வாய்ந்த வேற்று மதத்தவர்கள் இங்கு அதிபராகப் பதவி வகிக்க முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, தாங்கள் தலையிட்டு பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

தகுதிக்கு ஏற்ப நியமனம்

தகுதிக்கேற்ற நியமனம்: குறித்த பாடசாலையில் அதிபர் தரத்தில் பணியாற்றும் தகுதியுடைய இரு இந்து ஆசிரியர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, அவர்களுக்குக் கீழ்நிலை தரத்தில் (ஆசிரியர் தரம்) உள்ள ஒருவரின் கீழ் பணியாற்றப் பணிப்பது மிகுந்த அநீதியாகும்.

எனவே, அவர்களின் தகுதிக்கு ஏற்ப யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகளில் அவர்களை அதிபர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகின்றேன். சமத்துவமான நடைமுறை: கிறிஸ்தவப் பாடசாலைகளில் இந்துக்கள் அதிபராக வர முடியாத நிலைப்பாடு இருப்பது போல, இந்துப் பாடசாலைகளிலும் ஏனைய மதத்தவர்களுக்கு இதைப் போன்ற நடைமுறைகளே பின்பற்றப்பட வேண்டும்.

மன்னார் பாடசாலை ஒன்றில் அதிபர் நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக ஆளுநருக்கு கடிதம் | Letter To North Governer

நிர்வாகக் கட்டுப்பாடு: குறிப்பாக, வட மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் ரஞ்சன் அவர்களின் இந்துக்கள், இந்து மாணவர்கள் மற்றும் இந்துப் பாடசாலைகளுக்கு எதிரான மறைமுகச் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி, நடுநிலையோடு செயற்பட உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்விஷயத்தில் ஆளுநர் உடனடியாகத் தலையிட்டு, தகுதியுடைய அதிகாரிகளுக்கு நீதியைப் பெற்றுத்தர ஆவன செய்யுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்சத்தில் நாட்டிலிருந்து அவசரமாக தப்பியோடும் அரசியல்வாதி மற்றும் உயர் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் நெருங்கும் புலனாய்வாளர்கள்

அச்சத்தில் நாட்டிலிருந்து அவசரமாக தப்பியோடும் அரசியல்வாதி மற்றும் உயர் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் நெருங்கும் புலனாய்வாளர்கள்

கொழும்பில் கைப்பற்றப்பட்ட போலி நாணயத்தாள்கள் - இரகசிய நடவடிக்கையில் சிக்கிய நபர்

கொழும்பில் கைப்பற்றப்பட்ட போலி நாணயத்தாள்கள் - இரகசிய நடவடிக்கையில் சிக்கிய நபர்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US