தமிழக முதலமைச்சருக்கு யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற கடிதம்!
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ஸ்ரீகாந்தா கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இன்றைய தினம் குறித்த கடிதம் அவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
துயரக் கடலில் தொடர்ந்து தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை தமிழர் பால் தாங்கள் வெளிப்படுத்தி நிற்கும் பாசத் துடிப்புக்கும் பரிவுக்கும் எமது மனங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இலங்கைத் தீவில் வாழ முடியாமல் இந்திய நாட்டிற்கு இடம் பெயர்ந்து தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ள தமிழ் உடன் பிறப்புக்களின் நல்வாழ்வுக்காய் தாங்கள் முன்னெடுத்திருக்கும் சீரிய செயற்திட்டங்களுக்கு எமது மக்களின் சார்பில் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றோம்.
தங்கள் நற்பணிகள் அனைத்தும் வெற்றி பெற எங்கள் நல்வாழ்த்துக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri