நாட்டை தூய்மையாக்குவோம் சிரமதானப்பணி யாழில் முன்னெடுப்பு

Sri Lanka Police Jaffna Northern Province of Sri Lanka
By Erimalai Sep 28, 2024 10:25 AM GMT
Report
Courtesy: Dharu

லயன்ஸ் கழகத்திதின் நாட்டை தூய்மையாக்குவோம் (cleanup srilanka) எனும் தொனிப்பொருளிலான கடற்கரையை சுத்தமாக்கும் சிரமதானப்பணி இன்று வடமராட்சி பருத்தித்துறை தும்பளை கடற்கரையில் வட பிராந்திய தலைவர் வேலுப்பிள்ளை தவச்செல்வம் தலமையில் இடம்பெற்றது.

இன்று காலை 7:30 மணிமுதல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.

சிரமதானப் பணி

யாழ்ப்பாணத்தின் ஏழு லயன்ஸ் கழகங்கள் இணைந்து முன்னெடுத்த குறித்த சிரமதானப்பணியில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான குழுவும் கழந்துக்கொண்டது.

மேலும் இதில், சுமார் முப்பதிற்க்கு மேற்பட்ட பொலிஸாரும், தும்பளை கிழக்கு சமுர்த்தி குழுக்கள் ஆகியோரும் பங்குபற்றியிருந்ததுடன் பருத்தித்துறை நகரசபை கழிவுகளை ஏற்றிச்செல்வதற்க்கான வாகனத்தை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார்

இந்நிலையில், மன்னார் ரோட்டரி கழக அங்கத் தவர்களினால் சீரோ பொலித்தீன் என்னும் கருப்பொருளுக்கு அமைவாக மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி ஜே.ஆர்.எஸ்.நிலையத்திற்கு அருகில் உள்ள வாய்க்காலில் காணப்படும் பொலித்தீன் பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கண்ணாடி போத்தல்கள் என்பன அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வானது மன்னார் ரோட்டரி கழகத்தின் தலைவர் திருமலைராசா தனேஸ் தலைமையில் இன்று (28) காலையில் 7.00 மணியளவில் இடம் பெற்றது.

குறித்த சிரமதான நிகழ்வில் மன்னார் ரோட்டரி கழக அங்கத்தவர்களுடன் பாடசாலை மாணவர்களை கொண்ட ரோட்டிரக்ட் மற்றும் இன் டிரக்ட் அங்கத்தவர்களும் மன்னார் நகர சபையின் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

நாட்டை தூய்மையாக்குவோம் சிரமதானப்பணி யாழில் முன்னெடுப்பு | Let Us Make The Country Clean

செய்தி - ஆஸிக்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US