கோவிட் தொற்றுடன் வாழ்வோம் - பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தும் சிங்கப்பூர்
கோவிட் வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டிருந்த பயணத்தடைகளை தளர்த்த சிங்கப்பூர் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவிட் வைசரசுடன் வாழவும், நாட்டை முன்நோக்கி கொண்டு செல்லவும் காலம் வந்துள்ளதால், பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானித்துள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் கூறியுள்ளார்.
இதற்கு அமைய சில நாடுகளில் கோவிட் தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக்கொண்ட நபர்களுக்கு தனிமைப்படுத்தல் இன்றி சிங்கப்பூருக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, டென்மார்க், ஸ்பெயின், பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் சிங்கப்பூருக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் கொரிய பிரஜைகளுக்கு இந்த அனுமதி வழங்கப்படவுள்ளது.
எனினும் இலங்கை, இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளுக்கு சிங்கப்பூருக்குள் செல்ல அனுமதி வழங்கப்படுமா என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 15 மணி நேரம் முன்
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam