திடீரென கடுமையாக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள்: அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்

Sri Lanka Police Law and Society Trust Sri Lankan Peoples Sri Lanka Government Law and Order
By Yoosuf Jun 10, 2026 01:06 PM GMT
Report

கடந்த காலங்களில் இலங்கையில் 50cc க்குக் குறைவான, குறிப்பாக 48cc கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்களை வீதிகளில் செலுத்துவதற்கு எந்தவித மோட்டார் போக்குவரத்து திணைக்களப் பதிவுகளோ அல்லது விசேட ஆவணங்களோ சட்டப்படி தேவைப்பட்டிருக்கவில்லை.

இவற்றை விற்பனை செய்யும் வர்த்தக நிலைய உரிமையாளர்களால் வழங்கப்படும் சாதாரண கொள்வனவுக் கடிதம் (Shop Receipt/Invoice) மட்டுமே இத்தனை காலமும் இவ்வாறான வாகனங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

2025ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்

2025ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்

இருப்பினும், இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய மோட்டார் போக்குவரத்து சட்ட ஒழுங்குவிதிகளின்படி, 48cc மோட்டார் சைக்கிள்களுக்கும் ஏனைய வாகனங்களைப் போன்றே சுங்க ஆவணங்கள் (Customs Documents), TIN சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து முறையான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

திடீர் மாற்றம்

இந்தத் திடீர் சட்ட மாற்றத்தின் காரணமாக, கடந்த காலங்களில் 48cc மோட்டார் சைக்கிள்களைக் கொள்வனவு செய்த பெருமளவிலான நடுத்தர மற்றும் சாதாரண பொதுமக்கள் தற்போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் வாகனத்தை வாங்கிய கடையின் கடிதத்தைத் தவிர, சுங்கத் திணைக்கள ஆவணங்களோ அல்லது ஏனைய சட்டப்பூர்வ பத்திரங்களோ எதுவும் இல்லை.

திடீரென கடுமையாக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள்: அவதிக்குள்ளாகும் பொதுமக்கள் | Legal Actions On Tightened 48Cc Motorcycle

இதனால், தங்களது வாகனங்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்ய முடியாத ஒரு முட்டுக்கட்டை நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தங்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்காகவும், சிறு வியாபாரங்களுக்காகவும், பிள்ளைகளின் கல்வித் தேவைகளுக்காகவும் இந்த 48cc வாகனங்களை நம்பியிருந்த பல குடும்பங்கள், இவற்றை வீதிக்கு இறக்க முடியாமல் தவித்து வருகின்றன. பொலிஸாரின் விசித்திர நடைமுறையும் விபத்து அபாயமும் இது குறித்து போக்குவரத்துப் பொலிஸாரிடம் வினவியபோது, அவர்கள் ஒரு விசித்திரமான, அதேவேளை ஆபத்தான நடைமுறையைத் தெரிவிக்கின்றனர்.

48cc வாகனங்களால் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்

சாதாரண வீதிப் சோதனைகளின் போது பாதுகாப்புப் பொலிஸார் இந்த 48cc வாகனங்களின் ஆவணங்களை அவ்வளவாகக் கண்டிப்புடன் பார்ப்பதில்லை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த வாகனங்கள் ஏதேனும் விபத்துக்களுக்கு உள்ளானால், முறையான பதிவு ஆவணங்கள் மற்றும் காப்புறுதி (Insurance) இல்லாத காரணத்தினால், வாகனத்தை ஓட்டியவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படுவது சட்டப்படி கட்டாயமாகும் எனப் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த நடைமுறையானது மக்களிடையே பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீதியில் செல்லும்போது தடுக்காவிட்டாலும், எதிர்பாராத விதமாக ஒரு விபத்து நேர்ந்தால், முழுப் பழியும், சட்டப் பாதிப்பும் ஏழைப் பொதுமக்கள் மீதே விழும் நிலை காணப்படுகிறது.

திடீரென கடுமையாக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள்: அவதிக்குள்ளாகும் பொதுமக்கள் | Legal Actions On Tightened 48Cc Motorcycle

முறையான ஆவணங்கள் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக, ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான வாகனங்களை முடக்கி வைப்பது மக்களுக்குச் செய்யப்படும் அநீதியாகும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, போக்குவரத்து அமைச்சு மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) இணைந்து, கடந்த காலங்களில் கொள்வனவு செய்யப்பட்ட 48cc மோட்டார் சைக்கிள்களுக்கு மாத்திரம், ஒரு குறிப்பிட்ட சலுகைக் காலத்தை வழங்கி, கடையின் கொள்வனவுக் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு அவற்றுக்குப் பொது மன்னிப்பின் கீழ் (Amnesty Period) பதிவுகளை மேற்கொள்வதற்கு விசேட வழிமுறையொன்றை உருவாக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் பலத்த பாதுகாப்பு - சுரேஷ் சலே தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் பலத்த பாதுகாப்பு - சுரேஷ் சலே தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் பலத்த பாதுகாப்பு - சுரேஷ் சலே தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் பலத்த பாதுகாப்பு - சுரேஷ் சலே தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Yoosuf அவரால் எழுதப்பட்டு, 10 June, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US