1,000 ரூபா நாளாந்த ஊதியம் வழங்கத் தவறும் முதலாளிகள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா நாளாந்த ஊதியம் வழங்கத் தவறும் முதலாளிகள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தொழில்துறை ஆணையர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு மார்ச் 10 அன்று வெளியிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை மீறுவோருக்கு ஊதிய சட்டத்தின்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரபாத் சந்திரகீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டையும் சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை சம்பளச்சட்டத்தின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் தீர்மானிக்கப்பட்டுள்ளமையானது எதிர்காலத்தில் தொழிலாளர்களின் வேதனத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் எச்சரித்துள்ளது.