ஈரானிய தூதரை நாட்டை விட்டு வெளியேறுமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்த நாடு
லெபனான், ஈரானிய தூதரை விரும்பத்தகாத நபராக அறிவித்து, ஞாயிற்றுக்கிழைக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
ஈரான் தூதரக நெறிமுறைகளை மீறியதாகக் கூறி,தூதர் முகமது ரெசா ஷிபானி விரும்பத்தகாத நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர நெறிமுறைகளையும் நிறுவப்பட்ட நடைமுறைகளையும் தெஹ்ரான் மீறியதாகக் கூறி, லெபனான் தனது ஈரானுக்கான தூதரையும் கலந்தாலோசனைக்காக அழைத்துள்ளது.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள்
இதேவேளை, தெற்கு லெபனானில் உள்ள நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகள் மீது பல இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக,செய்திகள் வெளியாகியுள்ளன.

தெற்கு லெபனானில் உள்ள டயர் நகருக்கு அருகிலுள்ள ஒரு பிரபலமான குடியிருப்புப் பகுதி மீது ஒரு வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதே நேரத்தில் அருகிலுள்ள அல்-மாஷூக் பகுதி மீது மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டது. தெற்கு லெபனானில் உள்ள கஃபார் தெப்னிட் மற்றும் மஹ்ரூனா நகரங்கள் மீது மேலும் இரண்டு வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam