மலையக தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலையக தமிழ் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு இன்று(5) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான, மனோகணேசன், ஜீவன் தொண்டமான், பழனி திகாம்பரம்,வேலுசாமி இராதாகிருஸ்ணன், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்திய வம்சாவளி தமிழர்
இது தொடர்பில் மோடி வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில்,
“இந்திய வம்சாவளி தமிழர் (IOT) தலைவர்களுடனான சந்திப்பு பலனளித்தது.
இந்த சமூகம் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே ஒரு உயிருள்ள பாலமாக உள்ளது.
இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து IOT களுக்கான 10,000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித தலமான சீதா எலியா கோயில் மற்றும் பிற சமூக மேம்பாட்டுத் திட்டங்களை இந்தியா ஆதரிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri
