மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு தகாத முறையில் குறுஞ்செய்தி அனுப்பிய சட்டத்தரணி
மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் அச்சுறுத்தல் செய்யும் வகையில் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், சிலாபம் பகுதியில் குறித்த சட்டத்தரணியை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
முன்வைக்கப்பட்ட முறைப்பாடு
கடந்த 2022ஆம் ஆண்டு, சட்டத்தரணி தனக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மெசெஞ்சர் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக குற்றம் சாட்டி மேல் நீதிமன்ற நீதிபதி முறைப்பாடு அளித்திருந்தார்.
அதன்படி, சம்பவம் தொடர்பான உண்மைகளை பொலிஸார் ஆராய்ந்து சட்டமா அதிபருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சட்டத்தரணியின் நடவடிக்கை பாலியல் துன்புறுத்தலாக வகைப்படுத்தப்படும் என்றும், அவருக்கு எதிராக மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கமைய, குற்றப் புலனாய்வுத் துறை, சந்தேக நபரான சட்டத்தரணியை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
