கருத்து சுதந்திரத்தை கேள்விக்கு உட்படுத்துகின்ற விதமாக புதிய சட்டம்: மணிவண்ணன் ஆவேசம்
மக்களுடைய கருத்து சுதந்திரம் என்பது இலங்கையில் அடிப்படை உரிமையாக அரசியல் அமைப்பிலே உட்புகுத்தப்பட்டிருக்கின்ற ஒரு விடயம், அதை கேள்விக்கு உட்படுத்துகின்ற விதமாக புதிய சட்டம் கொண்டுவரப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டணியின் உறுப்பினரும், யாழ்ப்பாண மாநகர முன்னாள் முதல்வருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (10.03.2023) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்
மேலும் தெரிவிக்கையில், இந்த காலகட்டத்திலே இரண்டு விதமான சட்டங்களை அரசாங்கம் முன்மொழிந்து அதை நிறைவேற்றுவதற்கு துடித்துக் கொண்டிருக்கிறது. ஒன்று பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்.
ஏற்கனவே இருக்கின்ற பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு புதிதாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்கின்ற பேரிலே புதிய ஒரு சட்டத்தை கொண்டு வருகின்ற முனைப்பிலே அரசாங்கம் இருக்கிறது.
அதேபோன்று நிகழ்நிலைக்காப்பு சட்டமென்ற இன்னுமொரு சட்டத்தையும் கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கத்தின் மீது இருக்கக்கூடிய விமர்சனங்களை பொதுமக்கள் முன்வைக்காமல் தடுக்கின்ற ஒரு மோசமான ஒரு சட்ட ஏற்பாடாக தான் நிகழ்நிலை காப்பு சட்டம் இருக்கிறது.
இது மக்களுடைய கருத்து சுதந்திரத்தை அப்பட்டமாக விழுங்குகிறது. மக்களுடைய கருத்து சுதந்திரம் என்பது இலங்கையில் அடிப்படை உரிமையாக அரசியல் அமைப்பிலே உட்பகுத்தப்பட்டிருக்கின்ற ஒரு விடயம். அதை கேள்விக்கு உட்படுத்துகின்ற விதமாக இந்த சட்டம் கொண்டுவரப்படுகிறது.
மக்களை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம்
அரசாங்கம் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு அல்லது மக்கள் எதிர்க்க கூடாது என்று கட்டுப்படுத்துவதற்கு செய்கின்ற ஒரு மோசமான ஒரு வேலைத்திட்டமாக தான் நாங்கள் இதை பார்க்கின்றோம்.
இந்த சட்டம் நாடாளுமன்றத்திலே நிறைவேற்றப்படக்கூடாது. இந்த சட்டத்துக்கு எதிராக பொதுமக்கள் கலந்துரையாட வேண்டும். ஏனென்றால் அரசாங்கத்துக்கு எதிராக பொதுமக்கள் வாய் திறந்தால் அவர்கள் தண்டிக்கப்படக்கூடிய ஒரு அவல நிலைமை இந்த சட்டத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட போகிறது.
இதற்கு எதிராக முழுமையான எதிர்வினை ஆற்ற வேண்டிய தருணமாக நாங்கள் பார்க்கின்றோம்.
அதேபோன்று பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் ஏற்கனவே இருந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எந்த விதத்திலும் குறைச்சலானது அல்ல. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
அதை நாங்கள் எதிர்க்கின்றோம். அந்த சட்டம் இயற்றப்படக்கூடாது அதற்கு எதிராகவும் தமிழ் மக்கள் மட்டுமல்ல இலங்கை தீவில் வாழக்கூடிய சட்டத்தை நேசிக்கின்ற சட்டவாட்சியை நேசிக்கின்ற அல்லது விரும்புகின்ற அனைத்து தரப்பும் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
