தெற்கிலே ஒரு சட்டம் வடக்கிலே ஒரு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது: கோவிந்தன் கருணாகரம் விசனம்
தெற்கிலே ஒரு சட்டம் வடக்கிலே ஒரு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்றால் ஏன் இந்த நாடு ஒன்றுபட்டதாக இருக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், ஒரே நாட்டுக்குள் ஒரே சட்டத்தினை பேணிப்பாதுகாக்க முடியாவிட்டால் ஒரே நாடு தேவையில்லை என்ற நிலைமைக்கு எங்களை தள்ளிவிடுகின்றீர்கள் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு தை மாதம் 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இரால் பண்ணையில் படுகொலைசெய்யப்பட்டவர்களை நினைவு கூரும் நிகழ்வினை நடாத்தியமை தொடர்பில் கோவிந்தன் கருணாகரம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஆகியோர் மீது கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கின் விசாரணை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் நடைபெற்றது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



