யாழில் பெருந் தொகை பணத்தை தொலைத்த தாய்! சில நிமிடங்களிலேயே மீட்டுக் கொடுத்த பொலிஸார்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் தாயொருவர் பேருந்தொன்றில் தொலைத்த பெரும் தொகைப்பணம் பொலிஸாரால் மீட்கப்பட்டு அவரிடமே ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
யாழ் மாவட்ட பிராந்திய போக்குவரத்து பொலிஸார் தொன்னூற்றாறாயிரம் ரூபாய் பணத்தையே இவ்வாறு மீட்டு அந்த தாயிடம் நேற்று(22) 4 மணியளவில் ஒப்படைத்துள்ளனர்.
பேருந்தில்
யாழ்ப்பாணத்திலிருந்து சுன்னாகம் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றில் பயணித்த 62 வயதுடைய ராஜலட்சுமி சௌந்தர்ராஜன் என்பவர் வங்கியொன்றிலிருந்து பணத்தொகை பெற்றுக்கொண்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அருகே இறங்கி நடந்து வந்துள்ளார்.
அவர் வங்கியிலிருந்து மீளப்பெற்ற தொன்னூற்றாறாயிரம் ரூபாய் பணத் தொகையை பணப்பையினுள் பார்த்த பொழுது அப்பணம் பையினுள் இல்லை என்பதை அவதானித்துள்ளார்.
அந்த இடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த யாழ் மாவட்ட பிராந்திய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரிடம் சம்பவம் தொடர்பாக அழுதவண்ணம் விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த இரு போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் பணத்தை தொலைத்த தாயாரின் தேசிய அடையாள அட்டையை வாங்கி கொண்டுள்ளனர்.
பின்னர் அந்த பேருந்தை கொக்குவில் பகுதியில் வழிமறித்து பேருந்தில் இந்த தேசிய அடையாள அட்டைக்குரியவர் பயணம் செய்து உள்ளார் அவர் குறிப்பிட்ட ஒரு பணத் தொகையை இழந்துள்ளார். நாங்கள் முழுவதையும் சோதனையிட்டு பேருந்திலிருந்து இறங்குவோம் என தெரிவித்துள்ளனர்.
பேருந்தில் ஆரம்பத்தில் எதுவித தொகையும் கீழே விழுந்திராத நிலையில் குறிப்பிட்ட சிலரை சோதனையிட்ட பின்பு பணத்தொகை ஆசனத்தின் கீழே இருப்பது தெரியவந்துள்ளது.
கிடைக்கபெற்ற பணப்பையில் உள்ள பணத் தொகையை எடுத்து சோதனைக் உள்ளாகிய நிலையில் 89 ஆயிரம் ரூபாய் பணம் மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளது.
மக்கள் பாராட்டு
சம்பவ இடத்திற்கு விரைந்த தாய் தனது மகளிடம் கூறி பணத்தை பெற்ற வங்கி படிவத்தை பொலிசாரிடம் காட்டியுள்ளார். 6000 ரூபாய் பணம் மட்டும்தானே காணவில்லை என தெரிவித்து குறித்த பணத்தைப் பெற்றுச் சென்றுள்ளார்.
அந்த பகுதியில் இருந்த பொதுமக்களால் அந்த இரு போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
