தெற்கில் பெருமளவு போதைப்பொருள்: முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் கைது
பன்னல பிரதேச சபையின் முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில் போதைப்பொருள் கொண்டு சென்ற பல நாள் மீன்பிடி படகை இடைமறித்து அதன் ஆறு பணியாளர்களைக் கைது செய்த சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
இலங்கை கடற்படையினரால், நேற்று(20) தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட, இந்த பல நாள் மீன்பிடிக் கப்பல், பின்னர் தங்காலை மீன்வளத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது, அதில் இருந்த ஆறு உள்ளூர் கடற்றொழிலாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

15 பொதிகள் படகில் இருந்ததாகக் கூறப்படுகிறது, அதில் 300 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 100 கிலோகிராம் 'ஐஸ் என்பன இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மீன்பிடி படகில் இருந்து இரண்டு புத்தம் புதிய துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர் மற்றும் 9 மிமீ பிஸ்டல் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன.