இலங்கை - இந்திய புரிந்துணர்வு உடன்படிக்கைகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட 7 புரிந்துணர்வு உடன்படிக்கைகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட 7 புரிந்துணர்வு உடன்படிக்கைகளை ரத்து செய்யுமாறு இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுக்காமல் நிராகரிக்க உச்ச நீதிமன்றம் இன்றைய தினம் தீர்மானித்தது.
உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பிரனாந்து ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை வழங்கியது.
கலாநிதி குணதாஸ அமரசேகர உள்ளிட்ட குழுவினரும், வினிவித பெரமுன என்ற அமைப்பும் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
இந்த ஒப்பந்தம் நாட்டுக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் எனவும் இந்தியா தேவையின்றி இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்யும் எனவும் குறித்த தரப்பினர் குற்றம் சுமத்தியிருந்தனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் திருவிழா




