நாட்டில் கடும் மழையுடனான காலநிலை: 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் கடும் மழையுடனான காலநிலை தொடரும் நிலையில் 10 மாவட்டங்களிலுள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அவ்வகையில் பதுளை, காலி, கண்டி, களுத்துறை, மாத்தளை, மாத்தறை, மொனராகலை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் தொடரும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் 13 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 09 ஆயிரத்து 635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வெள்ளம் மற்றும் மண்சரிவு, மரம் முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்களால் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 6 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 318 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
எனவே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
