மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம்.. மூன்று இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
புதிய இணைப்பு
மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் சில இடங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
முதலாம் இணைப்பு
நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மூன்று மாவட்டங்களில் உள்ள மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிப்பவர்களுக்கு முன்கூட்டியே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) வெளியிட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை நேற்று (05.01.2026) இரவு 10:00 மணி முதல் இன்று(06.01.2026) பிற்பகல் 1:00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
மஞ்சள் எச்சரிக்கை
பின்வரும் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நிலை-1 (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தின் உடதும்பர பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |