மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கவும்! நாட்டின் சில பகுதிகளுக்கு நாளை வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களுக்கு மண்சரிவு குறித்த 'முதலாம் கட்ட' முன்னெச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ளது.
இதன்படி, அப்பகுதி மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை
இந்த முன்னெச்சரிக்கைகள் இன்று (24) மாலை 4 மணி முதல் நாளை (25) மாலை 4 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில், மாவனெல்ல, தெரணியகல, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட, அரநாயக்க மற்றும் யட்டியந்தோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ மற்றும் நோர்வூட் ஆகிய பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் எலபாத ஆகிய பிரிவுகளுக்கும் 'முதலாம் கட்ட' நிலச்சரிவு முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.