பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் முறையிட முடியும் - ஆளுநர் ஜீவன் தியாகராஜா வேண்டுகோள்
வடமாகாணத்தில் உள்ள தமது காணியில் மோசடியாக ஆக்கிரமிக்கப்பட்ட அல்லது போலியான உறுதிப்பத்திரங்களினால் ஏமாற்றப்பட்ட காணி உரிமையாளர்கள் தமது விபரங்களை யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநரின் தலைமை அலுவலகத்தில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என வடமாக ஆளுநர் ஜீவன் தியாகராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வட மாகாணத்தில் உள்ள தனியார் காணிகளின் உரிமையாளர்கள் வெளிநாடுகளிலோ அல்லது வேறு எந்த பாகத்திலும் இருக்கின்ற நிலையில் அவர்களின் காணிகள் மோசடியான வழியிலோ போலியான உறுதிப்பத்திரங்கள் மூலம் அபகரிக்கப்பட்டு இருந்தால் அது தொடர்பில் ஆளுநர் செயலகம் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கின்றது.
ஆகவே பாதிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் உரிமை
கோரக் கூடிய ஆதாரங்களுடன் காணிப்பதிவு பற்றிய விபரங்களை
பழைய பூங்கா வீதியில் உள்ள ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பும் பட்சத்தில்
நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.