கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் லால்காந்த வெளியிட்ட சர்ச்சை கருத்து
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தமக்கு தெரியாது என அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான லால்காந்த, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இம்முறை தேர்தலில் போட்டியிட்ட வெற்றியீட்டிய தேசிய மக்கள் சக்தியின் 159 உறுப்பினர்களில் சிலருடன் தமக்கு அறிமுகமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்களா அல்லது சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்களா என்பது தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் சக உறுப்பினர்களுடன் அறிமுகமில்லை என்ற அடிப்படையில் லால்காந்த கருத்து வெளியிட்டுள்ளார்.