சிறைச்சாலைக்குள் ஹெரோயின் கடத்த முயன்ற பெண் கைது
புதிய மெகசின் சிறைச்சாலைக்குள் சூட்சுமமான முறையில் போதைப் பொருளை கடத்த முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியொருவரைப் பார்வையிடுவதற்காக வருகை பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைதிக்கு வழங்குவதற்காக வந்திருந்த உணவு பொதியில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தமை சிறைச்சாலை புலனாய்வு பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்
அவர் கொண்டு வந்திருந்த பராட்டா உணவுப் பொதியில் 10 கிராம் கொண்ட 3 பெக்கட்டுக்களில் ஐஸ் போதைப்பொருள் இருந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த பெண்ணை கைதுசெய்தனர்.

கைது செய்யப்பட்ட பெண் மற்றும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 17 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan