கடலில் தீப்பற்றிய அல்-சல்மி கப்பல் - உலக சந்தையில் மீண்டும் உயர்ந்த மசகு எண்ணெய்
டுபாய் கடற்கரைக்கு அப்பால் மசகு எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குவைத் கொடியுடன் பயணித்த 'அல்-சல்மி' (Al-Salmi) என்ற கப்பலே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகத்தின் நங்கூரமிடும் பகுதியில்
பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஏவுகணைகள் அல்லது வெடிபொருட்கள் ஏந்திய ட்ரோன் மூலம் வர்த்தகக் கப்பல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களின் சமீபத்திய நிகழ்வாக, இந்த தாக்குதல் அமைந்துள்ளது.

தற்போதைய சந்தை விலையின்படி 200 மில்லியன் டொலர்களுக்கும் அதிக மதிப்புள்ள, சுமார் 2 மில்லியன் கொள்கலன் மசகு எண்ணெயை ஏற்றிச் செல்லக்கூடிய இந்தக் கப்பல் மீதான தாக்குதல் குறித்து குவைத் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டதை அடுத்து, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
அல்-சல்மி எண்ணெய் கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இது எண்ணெய் கசிவுக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் குவைத் பெட்ரோலியக் கழகம் எச்சரித்துள்ளது.
அரச செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, 'அல்-சல்மி' என்ற பெயருடைய அந்த எண்ணெய் கப்பல், துறைமுகத்தின் நங்கூரமிடும் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தபோது குறிவைக்கப்பட்டது.
வளைகுடா பிராந்தியத்திலும், முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையிலும் வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்டு வரும் தொடர் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும் என குறிப்பிட்டுள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 20 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam