நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட குருந்தூர் மலை தொடர்பான வழக்கு (Video)
முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை தொடர்பான வழக்கு விசாரணையொன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று (24.11.2022) எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைகள்
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பௌத்த விகாரை தொடர்பிலான வழக்கு இலக்கம் AR / 673 வழக்கின் மீதான கட்டளை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவால் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு தொடக்கம் முல்லைத்தீவு குருந்தூர்மலை பகுதியில் தொல்லியல் ஆய்விற்க்கு எனும் பெயரில் தமிழ் மக்களின் வழிபாட்டு இடம் அழிக்கப்பட்டு பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் பிரதிவாதிகளாலும் வழக்கு தொடுனர்களாலும் சமர்ப்பணங்கள் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்துள்ளன.
நீதிமன்ற கட்டளை
இதன் தொடர்சியாக இந்த வழக்கில் பல்வேறு கட்டளைகளை நீதிமன்றம் வழங்கி வந்த நிலையில் அந்த கட்டளைகளையும் மீறி பௌத்த கட்டுமான பணிகள் இடம்பெற்று வந்திருந்தன.

இதன்படி கடந்த ஜூலை மாதம் கட்டளை ஒன்று வழங்கிஇருந்தது. அதாவது 12.06.2022 அன்று எந்த நிலையில் குருந்தூர் மலை பிரதேசம் இருந்ததோ அங்கு இடம்பெற்றுவந்த கட்டுமானங்கள் இருந்ததோ அந்த நிலையினை தொடர்ந்தும் பேண வேண்டும் என்றும் புதிதாக மேற்கொண்டு கட்டுமானங்களை செய்யமுடியாது என்றும் கட்டளை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றுவரும் குருந்தூர்மலைக்கு முல்லைத்தீவு
நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி .சரவணராஜா மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி
சொலிசிட ஜெனரல் மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் நேரடியாக சென்று
பார்வையிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 20 மணி நேரம் முன்
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri