குமார் பொன்னம்பலத்தின் 26 ஆவது ஆண்டு நினைவு தினம்
சிரேஷ்ட அரசியல்வாதியும் சட்டத்தரணியுமான குமார் பொன்னம்பலத்தின் 26 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்றையதினம்(5) யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
நேற்றையதினம்(5) பிற்பகல் கொக்குவில் பொற்பதி வீதியில் உள்ள அறிவாலய மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வும், நினைவேந்தல் பொதுக்கூட்டமும் இடம்பெற்றது.
நினைவு தினம்
இதன்போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ். மாநகர சபை உறுப்பினர் கனகையா ஸ்ரீ கிருஸ்ணகுமாரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து குமார் பொன்னம்பலத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.நிரோஸ், பருத்தித்துறை நகர சபையின் தவிசாளர் வின்சன்டீபோல் டக்ளஸ் போல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
குமார் பொன்னம்பலம் 2000 ஆண்டு ஜனவரி 5ம் திகதி கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam