கொட்டகலை வெட்டுடையார் காளியம்மன் ஆலய வருடாந்த அலங்கார சங்காபிஷேக பெருவிழா
நுவரெலியா (Nuwara eliya) - கொட்டகலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயிலின் வருடாந்த அலங்கார சங்காபிஷேக பெருவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
சங்காபிஷேக நிகழ்வு ஆலய பிரதமகுரு தற்புருஷ சிவாச்சாரியார் சிவ ஸ்ரீ. ஸ்கந்தராஜ குருக்கள் தலைமையில் இன்று (14.05.2024) நடைபெற்றுள்ளது.
பால்குட பவனி
விநாயகர் வழிபாட்டுடன் காலை ஆரம்பிக்கப்பட்ட பால்குட பவனி கொட்டகலை நகர் ஸ்ரீ முத்து விநாயகர் சுவாமி தேவஸ்தானத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஆலய அறங்காவலர் சபையினர், பக்தர்கள் புடைசூழ திருக்கோயிலை சென்றடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து கடகஸ்தாபனம், விஷேட யாகபூஜை, அம்மனுக்கு பாலாபிஷேகம், 1008 சங்குகளோடு சங்காபிஷேகம் மற்றும் அலங்கார உற்சவம் நடைபெற்று வசந்த மண்டப பூஜையுடன் அம்மன் உள்வீதி வலம் வந்துள்ளார்.
மேலும் மகேஸ்வர பூஜையுடன் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவடைந்துள்ளது.
செய்தி மற்றும் புகைப்படங்கள் - நீலமேகம் பிரசாந்த்