கொழும்பில் பண தகராறு காரணமாக மோதி கொண்ட பெண் உட்பட மூவர் - ஆண் பலி
கொழும்பு - கிராண்ட்ஸ், கம்பிகொட்டுவ பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனிப்பட்ட பண தகராறு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பண தகராறு
இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு உள்ளானவர்களில் பெண்ணொருவரும் அடங்குவார்.
ராஜா சந்திரசேகரன், சமன் குமார குணசேகர மற்றும் ஷானிகா ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர்கள் கிராண்ட்ஸில் வசிப்பவர்கள். சம்பவம் குறித்து கிராண்ட்ஸ் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம் News Lankasri

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து? 2.5 லட்சம் கனேடியர்கள் மனுவில் கையெழுத்து News Lankasri
