கிண்ணியா உப பஸ் டிப்போ, டிப்போவாக தரமுயர்த்தப்படும்: திலும் அமுனுகம
கிண்ணியா உப பஸ் டிப்போ, டிப்போவாக தரமுயர்த்தப்படும் எனப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிண்ணியா பஸ் டிப்போ தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னதாக கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்,
இது எனது தந்தையினால் 1994.07.27 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. .ஆரம்பிக்கப்பட்டு 27 வருடங்கள் கடந்தும் இன்னும் உப டிப்போவாகவே காணப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் முதலாவது உபசாலை இதுவாகும். கிண்ணியாவிற்கு பின்னர் உபசாலைகளாக ஆரம்பிக்கப்பட்ட காத்தான்குடி, களுவாஞ்சிகுடி உபசாலைகள் தற்பொழுது டிப்போவாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.
எனவே இதை டிப்போவாக தரமுயர்த்த முடியுமா எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர்,
அரசின் செலவினங்களைக் குறைக்கும் முகமாக அருகருகே உள்ள உப பஸ் டிப்போக்களை
மூடுகின்ற கொள்கையில் அரசு இருந்தாலும் கிண்ணியா உப பஸ் டிப்போ பிரதான பஸ்
டிப்போவில் இருந்து 20 km க்கு அப்பால் உள்ளதால் இது டிப்போவாக
தரமுயர்த்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.