வீதி புனரமைப்பு தொடர்பில் கிண்ணியா பிரதேச சபை மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை
கிண்ணியா பிரதேச சபை எல்லைக்குக்பட்ட காக்காமுனையையும் கோழி முட்டை கரச்சையையும் இணைக்கும் வீதியானது மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாது குண்டும் குழியுமாக காணப்படுவதால் போக்குவரத்து செய்ய முடியாத நிலை காணப்படுவதாக அப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதி சுமார் 15 வருட காலமாக உடைந்து பள்ளமும் படுகுழியுமாக காணப்படுவதுடன் மழை காலங்களில் நீர் தேங்கி நிற்பதனால் இதன் மூலம் பயணிப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும், நாளாந்தம் இவ்வீதியை பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பயன்படுத்தி வருகின்றனர்.
அதிகாரிகளின் அசமந்த போக்கு
இந்நிலையில், பல முறை உரிய அதிகாரிகளிடம் வீதியை புனரமைக்க கோரி எழுத்து மூலமாக கடிதங்கள் வழங்கப்பட்ட போதிலும் இன்னும் புனரமைக்கப்படவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது மழை காலம் என்பதால் நீர் தேங்கி நிற்பதனால் போக்குவரத்துக்கு தடையாகவும் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
கிண்ணியா பிரதேச சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலமாகவோ இவ்வீதியை செப்பனிட்டு தருமாறும் கோரிக்கையை முன்வைப்பதுடன் தற்போதைய அரசாங்கத்திடமும் கோரிக்கையாக முன்வைக்கிறோம் எனவும் கூறுகின்றனர்.
கடந்த காலங்களில் இவ்வீதியை குப்டை கூலங்களை வைத்து மூடியும் அபிவிருத்தி என்ற போர்வையில் நாசமாக்கினர். எனவே உரிய வீதியை விரைவாக புனரமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam