சூரிய சக்தியில் இயங்கும் முச்சக்கர வண்டியை உருவாக்கிய கிளிநொச்சி மாணவன்
சூரிய சக்தியில் இயங்கக்கூடிய முச்சக்கர வண்டியொன்றை கிளிநொச்சியை சேர்ந்த மாணவன் உருவாக்கியுள்ளார்.
கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தரம் பத்தில் கல்வி கற்கும் சுந்தரலிங்கம் பிரணவன் என்ற மாணவரே இவ்வாறு கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி இந்த முச்சக்கர வண்டி உருவாக்கப்பட்டுள்ளது.
சுற்றுச் சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையில் சூரிய சக்தியை கொண்டு இயங்கக்கூடிய வகையில் எட்டு மாதங்களில் இந்த முச்சக்கர வண்டியை உருவாக்கியதாகத் தெரிவித்துள்ளார்.
தமது இந்த முயற்சிக்கு அவரது தாத்தா துரைசாமி சுப்பையா உதவிகளை வழங்கியுள்ளதாக மாணவன் பிரணவன் தெரிவிக்கின்றார்.
கொவிட் பெருந்தொற்று காலத்தில் நேரத்தை விரயப்படுத்தாது இவ்வாறான முயற்சியை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் இவ்வாறான ஓர் காரை உற்பத்தி செய்ய உத்தேசித்துள்ளதாகவும் அதற்கு அரசாங்கம் உள்ளிட்ட தரப்புக்களின் உதவியை நாட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri