புதிய பயங்கரவாதச் சட்டத்தை எதிர்த்து கிளிநொச்சி பிரதேச சபை தீர்மானம்
தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வரும் பொழுது, பயங்கரவாத சட்டத்தை முற்றாக நீக்குவதாக கூறினார். ஆனால் தற்போது புதிய பயங்கரவாதச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார், இதனை முற்றாக எதிர்த்து தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேலமாளிதரன் இன்று(19.02.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கரைச்சி பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு அன்று18.02.206 நேற்று நடைபெற்றது இதன்போது பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பாக பெரும் விவாதம் பல மணி நேரம் நடைபெற்றது.

குறித்த விவாதத்தின் கடந்த 1979 ஆம் ஆண்டிலிருந்து பயங்கரவாத தடைச் சட்டம் ஆனது பல்வேறு வகையில் தமிழ் மக்கள் மீது இலங்கை தீவிலே சிறுபான்மை இனமான தமிழ் மக்களை அடிமைப்படுத்தி ஆட்கொண்டிருக்கின்றது.
தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வரும் போது அந்த சட்டத்தை நீக்குவதாக கூறினார். ஆனால் தற்பொழுது பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக புதிய பயங்கரவாத தடைச் சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக நேற்றைய சபை அமர்வில் பல மணி நேரம் விவாதம் நடைபெற்றது. குறித்த விவாதத்தின் போது தமிழ் மக்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் அமையாது என்ற வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நிராகரிப்பதாக ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதன்போது சபை அமர்வில் கலந்து கொண்ட 37 பேரில் 36 பேர்கள் ஏகமனதாக தமது பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்து இருந்தனர்.
கட்டாகாளி கால்நடைகளின் தொல்லை
இதே வேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் கட்டாகாளி கால்நடைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும் வீதிகளில் மற்றும் பொது இடங்களில் மக்களுக்கு பல அசைவுகரியங்களை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் வீதி விபத்துக்களை ஏற்படுத்தி வருவதாகவும் போலீசாரால் கரைச்சு பிரதேச சபையிடருக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதன் காரணமாக குறித்த விடயம் தொடர்பாக எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் கால்நடை உரிமையாளர்கள் தமது கால்நடைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

டீமேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற பல்வேறு வர்த்தக சந்தைகளில் கந்துவட்டி என்னும் பெயரில் நாளாந்தம் சந்தைகளில் காலை பெருந்தொகை பணத்தை வியாபாரிகளுக்கு வழங்கி மாலை அதிக வட்டி அரைபடப்படுவதாக பிரதேச சபையினருக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக முன்னாள் போராளி ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam