இரணைதீவு கடற்பரப்பில் கைதான இந்திய கடற்தொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பிற்குள் கடந்த 9ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கைதான 14 இந்திய கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற நிலையில் கடந்த 9ஆம் திகதி 10 இந்திய கடற்தொழிலாளர்களும், கடந்த 14ஆம் திகதி நான்கு இந்திய கடற்தொழிலாளர்களும் இரணைதீவு பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் மன்னார் வடக்கு இரணைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பினுள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றில் முன்னிலை
கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை விசாரணைகளின் பின் கடற்படையினரிடமிருந்து கடற்தொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் வி.கனிஸ்ரன் மற்றும் கடற்தொழில் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான து.டிறோசன், செ.சதீஸ்குமார் ஆகியோர் இவர்களை பொறுப்பேற்றுக் கொண்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
இதனையடுத்து குறித்த 14 பேரையும் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்து.

இந்த நிலையில் குறித்த வழக்குகளானது இன்றைய தினம் (17.04.2026) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதிவான் பொன்னுத்துரை கிருசாந்தன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து குறித்த 14 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவு, சிக்கிய கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri