பூநகரி பிரதேசத்தின் முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
கிளிநொச்சி - பூநகரி பிரதேசத்தின் இந்த ஆண்டுக்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இன்று(26-02-2026) காலை9.30 மணியளவில் கிளிநொச்சி பூனகரி பிரதேச செயலக மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
குறித்த கலந்துரையாடல், பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் க.இளங்குமரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஸ்ரீ பவானந்த ராஜா, ராஜீவன் ஆகியோருக்கு ஆசனங்கள் ஒதுக்கப்பட்ட போதும் அவர்கள் குறித்த கூட்டத்தில் சமூகமாகவில்லை இதனால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் வெறுமையாக காணப்பட்டது.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மாத்திரமே கலந்து கொண்டிருந்தார்.
அதே போன்று, துறை சார்ந்த திணைக்களங்களின் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், சுற்றுலாத்துறை அபிவிருத்தி வனவளத்தினைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு, கடற்றொழிலாளர்களின் பல்வேறுபட்ட பிரச்சனைகள் ஆரயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்ட போதும் இதில் அவர்களின் பிரசன்னம் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது .

24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam