கிளிநொச்சியில் வெள்ள முன்னாயத்த கலந்துரையாடல்
வடகீழ் பருவமழை வெள்ள முன்னாயுத்த நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் சவால்களை திறம்பட நிர்வகிப்பது தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ், மேலதிக அரசாங்கதிபர் காணி அஜிதா பிரதீபன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் A.M.R.N.K அழகக்கோன் ,பிரதேச செயலாளர்கள் ,மாவட்ட பிரதம கணக்காளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், இராணுவத்தினர், கடற்படையினர், பொலிசார், மாவட்டதிலுள்ள அனைத்து திணைக்களங்களின் தலைவர்கள், தொண்டு நிறுவனம் சார்ந்தோர் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.