யாழ். - கிளிநொச்சி மாவட்ட கடல் எல்லைகளை வரையறுக்க நடவடிக்கை: சிறீதரன் உறுதி (Photos)
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த இரு மாவட்ட கடற்பரப்புகளில், கடற்றொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் நலன் கருதி அந்தந்த மாவட்டங்களின் கடல் எல்லைகளை வரையறை செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கடற்றொழிலாளர்களின் கோரிக்கை
பூநகரி பிரதேசத்தின் கெளதாரிமுனை, மண்ணித்தலை, விநாசியோடை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அண்மையில் அப்பகுதிக்கு நேரடியாகச் சென்றிருந்தார்.
இதன்போது, அப்பகுதியிலுள்ள கடற்றொழிலாளர்களோடு கலந்துரையாடியதன் அடிப்படையிலும், அவர்களோடு இணைந்து கெளதாரிமுனை தொடக்கம் கல்முனை வரையான கடற்பரப்பை படகுப்பயணம் மூலம் பார்வையிட்டதன் அடிப்படையிலும், அவர்களது கோரிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 1 மணி நேரம் முன்

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
