கிளிநொச்சியில் டிப்பர் வாகனம் மோதி விபத்து: தாயும் மகளும் படுகாயம்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள ஏ9 வீதியில் நடந்த விபத்தில் தாய் மற்றும் மகள் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
பாடசாலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் பிள்ளையை ஏற்றிக்கொண்டு டிப்போ சந்தி வழியே இன்று(12) பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் அதே பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இதேவேளை, விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனம் தப்பி செல்ல முற்பட்ட வேளையில், வீதியால் சென்ற பொதுமக்கள் டிப்பர் சாரதியை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




