பிரித்தானியாவில் உள்ளூராட்சி உறுப்பினராக இலங்கையரொருவர் தெரிவு
பிரித்தானியாவில் கடந்த 06 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் கிழக்கு சசெக்ஸ் உள்ளூராட்சி உறுப்பினராக இலங்கையரொருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக போட்டியிட்ட நிலையில்,இலங்கையரொருவர் வெற்றிப்பெற்றுள்ளார்.
கொழும்பினை பிறப்பிடமாகக் கொண்ட லூஷன் பெர்னாண்டோ என்பவரே இவ்வாறு பிரித்தானியா தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ளார்.
இலங்கை அரசாங்கத்துடன் பிரித்தானிய அரசு இணைந்து இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சிறந்தவொரு தீர்வினை வழங்க தனது வெற்றி சிறந்தவொரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளதாகவும்,உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க முயற்சித்து வருவதாகவும் கிழக்கு சசெக்ஸ் உள்ளூராட்சி உறுப்பினர் லூஷன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும்,இவர் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து பிரித்தானிய இராணுவம் மற்றும் மெட்ரோ பொலிஸ் ஆகியவற்றில் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri