அநுரவின் இந்திய விஜயத்தில் முக்கிய சந்திப்புக்கள்: வெளியாகிய அறிவிப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 16ஆம் திகதி டெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இந்தியாவில் முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஜனாதிபதி ஈடுபடவுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
இந்தியப் பிரதமர்
இந்தியப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் எனவும், வர்த்தக சமூகத்தினருடனும் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.
மேலும், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரும் ஜனாதிபதியுடன் டெல்லி செல்லவுள்ளனர். கடற்றொழிலாளர்கள் பிரச்சினை சம்பந்தமாகவும் சந்திப்புக்களில் கலந்துரையாடப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |