கிளிநொச்சி மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட மண்ணெண்ணெய்: அரசிடம் கேள்வி எழுப்பிய பிரதேச சபை உறுப்பினர்(Photo)

Kilinochchi Sri Lanka Economic Crisis Sri Lanka Fuel Crisis
By Erimalai Jun 16, 2022 10:22 AM GMT
Report

நாட்டின் கடனை அடைக்க முடியாத நிலையில் அரசு இருக்கின்ற போது வாகன குத்தகை பணத்தை எவ்வாறு மக்கள் செலுத்துவது என பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்ற நிலையில் அவர் இவ்வாறு ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் எரிபொருள் உள்ளிட்ட பிரச்சினைகள் தலை தூக்கியுள்ளது. இந்த நிலையில் குத்தகை வாகனங்களிற்கான நிதியை செலுத்த முடியாத நிலையில் மக்கள் இருக்கின்றார்கள்.

மண்ணெண்ணெய் தடை

கிளிநொச்சி மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட மண்ணெண்ணெய்: அரசிடம் கேள்வி எழுப்பிய பிரதேச சபை உறுப்பினர்(Photo) | Kerosene Banned For Kilinochchi District

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் பெட்ரோல், டீசல் மண்ணெண்ணெய் எதுவும் இல்லாமையால் வாகனங்கள் ஓடமுடியாது இருக்கின்றது.

குத்தகை தொகையை செலுத்த முடியாத நிலையில் வாகனங்களை பறிப்பதற்கு முயற்சிகளை நிதி நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளன.

யுத்தம் காரணமாக உழவு இயந்திரம், முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்களை குத்தகை அடிப்படையில் மக்கள் பெற்றுள்ள நிலையில் அதிக வட்டிகளை அறவிடும் வகையில் வங்கிகள் செயற்படுகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட மண்ணெண்ணெய்: அரசிடம் கேள்வி எழுப்பிய பிரதேச சபை உறுப்பினர்(Photo) | Kerosene Banned For Kilinochchi District

அரசினால் இலங்கை தீவில் உள்ள கடனை கட்டமுடியாமல் உள்ளது. தனியே ஒருவர் முச்சக்கரவண்டியை வைத்து உழைத்து வாழ்வதற்கு பெட்ரோல் இல்லை. மூன்று மாத்தில் அவரது குத்தகை செலுத்தப்படாவிடில் அவரது வாகனம் பறிமுதல் செய்யப்படுகின்றது. அறுவடை நேரத்தில் அதனை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரி கிளிநொச்சி மாவட்டத்திற்கு மண்ணெண்ணையை தடை செய்து வைத்துள்ளார்.

மக்கள்

கிளிநொச்சி மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட மண்ணெண்ணெய்: அரசிடம் கேள்வி எழுப்பிய பிரதேச சபை உறுப்பினர்(Photo) | Kerosene Banned For Kilinochchi District

இங்கு எமக்கென்று அமைச்சர் ஒருவர் இருக்கின்றார். கரையோரத்தில் இருக்கின்ற கடற்றொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு மண்ணெண்ணெய் இல்லாமல் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

கிளிநொச்சிக்கும் முல்லைத்தீவுக்கு ஒரு சட்டம். ஆனால் புத்தளம் உள்ளிட்ட பகுதிகளிற்கு மண்ணெண்ணெய் வருகின்றது. ஏன் எமது பிரதேசத்திற்கு மாத்திரம் இவ்வாறான நிலை உள்ளது.

எமது மக்களின் சொத்துக்கள் காப்பாற்றப்பட வேண்டும். தீர்வு வரும்வரை வாகனங்களிற்கான வட்டியை நிறுத்தி மக்களிற்கு சலுகை வழங்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US