நாகர் கோவில் பகுதியில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு....!
யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் பெருந்தொகையான கேரளா கஞ்சா விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சா இன்றைய தினம்(14.1.2026) அதிகாலை 3 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இன்றைய தினம் துன்னாலை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நாகர்கோவில் பகுதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
மேலதிக விசாரணை
இதன் போது 14 kg எடை உள்ள ஒன்பது பொதிகள் அடங்கிய கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளதாகவும் அவர்களை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மீட்கப்பட்ட கேரளா கஞ்சா மேலதிக விசாரணைகளுக்கு மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மற்றும் மேலதிக விசாரணைகளையும், சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகளையும் மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.