மேம்பாட்டை கொண்டாடும் தருணம்: Kelsey Homes உடன் ஆரம்பமான Blue Ocean குழுமத்தின் ஒரு புதிய அத்தியாயம்!
Kelsey Homes உடன் ஒரு புதிய அத்தியாயத்தை Blue Ocean குழுமம் ஆரம்பித்துள்ளது.
இது, தொடர்பில் Blue Ocean குழுமம் தமது பரிமாற்ற பத்திரம் தொடர்பில் பின்வருமாறு தெரிவித்துள்ளது.
“இன்று எங்கள் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லை அறிவிக்க உகந்த நேரம். சொத்துப்பத்திரம் உத்தியோகபூர்வமாக மாற்றப்பட்டு, ஒரு புதிய அத்தியாயத்திற்கும் மதிப்புமிக்க சாதனைக்கும் எம்மை அழைக்கிறது!
இந்த பத்திர மாற்றம் வெறும் உரிமை மாற்றமாக மட்டுமல்ல; இது கனவுகள், வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளின் தொடர்ச்சியாக திகழ்கிறது. இந்த சொத்து, அதன் வளமான வரலாற்றையும் பிரகாசமான எதிர்காலத்தையும், இனி வரும் காலங்களில் புதிய கனவுகளுக்கும் மறக்கமுடியாத நினைவுகளுக்கும் அடித்தளமாக செயல்படும்.
இந்த முக்கிய தருணத்தை கொண்டாடுவதை முன்னிட்டு, இதில் பங்களித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம். சட்ட ஆலோசகர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் என அனைவரின் தளராத ஆதரவே இச்சாதனையை சாத்தியமாக்கியது.
இந்த பத்திர மாற்றத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி, இந்த புதிய அத்தியாயம் அனைத்து தொடர்புடையவர்களுக்கும் வளமும் மகிழ்ச்சியும் வெற்றியும் அளிக்கட்டும் என்று எமது மனமார்ந்த ஆசிகள்.
உங்கள் கனவு இல்லத்தை தேர்ந்தெடுப்பது வாழ்நாள் முழுவதற்குமான முக்கியமான முடிவாகும், மற்றும் நீங்கள் நம்பும் கட்டிட மேம்பாட்டாளர்கள் மிக முக்கியம். Kelsey Homes என்பது வெறும் வீடல்ல; அது ஒரு வாழ்க்கை முறை – நுட்பமான பராமரிப்பு, ஆளுமை மற்றும் 42 வருட பாரம்பரியத்தோடு, நாட்டின் முன்னணி வீட்டு மேம்பாட்டு வளர்ச்சியாளர்களில் ஒன்றாக கெல்சி ஹோம்ஸ் திகழ்கிறது.
Kelsey Developments PLC இன் முழு உரிமைக்குட்பட்ட துணை நிறுவனம் மற்றும் பாராட்டப்பட்ட Blue Ocean குழுமத்தின் உறுப்பினராக, Kelsey Homes என்பது சிறந்த தரத்துக்குப் பெயர் பெற்றது.
200-க்கும் மேற்பட்ட வீட்டு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்து, 2,000-க்கும் அதிகமான மகிழ்ச்சியடைந்த வாடிக்கையாளர்களுடன், Kelsey Homes, உயர்நிலை வாழ்க்கைக்கு புதிய வரையறைகளை ஏற்படுத்தி, Gated Housing Development களில் பொற்காலத்தை நிறுவியுள்ளது.
Urban Heights, வத்தளை என்பது ஒரு தனியுரிமை வாய்ந்த நுழைவாயில் சமூகமாகும், இது 16 பிரமாண்டமான வீட்டு அலகுகளை கொண்ட 5-மாடி குடியிருப்பு வளாகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இவை அழகாக வடிவமைக்கப்பட்ட 2 மற்றும் 3 படுக்கையறை கொண்ட குடியிருப்புகள் ஆகும், மேலும் வத்தளையில் நிலம் விலை உயர்வுடன், மிகச் சிறந்த சொத்து மதிப்பும் அதிக வருவாய் தரும் முதலீட்டுப் பலனையும் வழங்குகின்றன.
பள்ளிகள், பல்பொருள் அங்காடிகள், வங்கிகள், மருத்துவமனைகள் மற்றும் உணவகங்களின் அருகே அமைந்துள்ள வத்தளையின் இதயப்பகுதியில், Urban Heights தனது குடியிருப்பாளர்களுக்கு ஒரு வசதியான மற்றும் மேம்பட்ட வாழ்க்கை சூழலை வழங்குகிறது.
இல. 88, Canal வீதி, ஹெந்தலை, வத்தளையில் Urban Heights உடைய பத்திர பரிமாற்ற நிகழ்ச்சியுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான வாழ்க்கை அனுபவங்களை வழங்கும் மற்றொரு முக்கிய மைல்கல்லை நாம் கொண்டாடுகின்றோம்.
அழகிய, பாதுகாப்பான மற்றும் அமைதியான வாழ்க்கையை மதிக்கும் ஒரு உயர்வான சமூகத்தின் அங்கமாக இருப்பதை கற்பனை செய்து பாருங்கள்! Kelsey Homes இல் முதலீடு செய்வது சொந்தமாக ஒரு சொத்தை வாங்குவதற்கு மேலானது.
இது சிறப்பின் பாரம்பரியத்தில் சேர்ந்து உரிமையின் பெருமையை அனுபவிப்பது. உங்கள் ஆசைகளை பிரதிபலிக்கும் வீட்டில் வாழும் வாய்ப்பை பயன்படுத்துங்கள்.
Kelsey Homes உடன், நீங்கள் மகிழ்ச்சி, ஆடம்பரம் மற்றும் மனநிம்மதியுடன் நிறைந்த எதிர்காலத்தை பாதுகாக்கிறீர்கள். வேறுபாட்டை கண்டறியுங்கள். இன்று Blue Ocean குழுமத்தின் ஒரு பெருமைமிக்க அங்கமான Kelsey Homes குடும்பத்தில் இணைந்திடுங்கள்!