நாடாளுமன்ற அமர்வுக்கான அழைப்பை புறக்கணித்த கெஹெலிய
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இன்றைய தினம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத்தின் புதிய அமர்வில் கலந்து கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளார்.
கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கும் இன்றைய தினம்(07.02.2024) இடம்பெறவுள்ள ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வில் கலந்து கொள்ள சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு
அவரை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வருமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அமைச்சுப் பதவியில் இல்லாத காரணத்தினால் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பின்வரிசை ஆசனமொன்றும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள கெஹெலிய ரம்புக்வெல்ல மறுப்புத் தெரிவித்துள்ளார். அதன் காரணமாக இன்று அவர் நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட மாட்டார் என்று தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri
