100 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரும் கெஹலிய
நியாயமான காரணமின்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்ததன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கி 100 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை தனக்குப் பெற்றுத் தருமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல்லவின் சட்டத்தரணிகள் ஊடாக இன்று (29) உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பில் சட்டத்தரணி சனத் விஜேவர்தன தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
மேலும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, மாளிகாகந்தை நீதிமன்றில் முன்னிலைப்பட்டிருந்தார்.
சிறைச்சாலையின் வாகனமொன்றில் இன்று பிற்பகல் அவர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

இந்நிலையில், தரமற்ற இம்யுனோகுளோபியுலின் தடுப்புசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களம் கடந்த இரண்டாம் திகதி கைது செய்யப்பட்ட கெஹலியவை மூன்றாம் திகதி மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது.
அதன் போது பெப்ரவரி 14ம் திகதி வரை கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பின்னர் பெப்ரவரி 14ம் திகதி மீண்டும் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டு இன்றைய தினம் வரை விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே அவர் இன்று பிற்பகல் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை செய்யப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan