கட்டுநாயக்க விமான நிலையத்தில் அறிமுகமாகும் புதிய வசதி
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் தங்கக் கடையொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. விமான நிலையத்தில் தங்க வணிகத்தை புதிய வர்த்தக வாய்ப்பாக அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான முன்மொழிவுகளை விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் ஸ்ரீலங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சமர்ப்பித்துள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தங்க நகைக்கடை
இந்த வசதி தற்போது பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இல்லாமையினால் இது தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தங்க நகைக்கடைகளை முன்னெடுக்கக்கூடியவர்களுக்கான விலைமனு கோரல் விடுக்கப்பட்டுள்ளது. இதில் சர்வதேச நிறுவனங்களை இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam