கரூர் விவகாரத்தில் புதிய திருப்பம்: உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
கரூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த குழுவில் ஐபிஎஸ் அதிகாரிகள் 2 பேர் இருப்பர் என்றும், வழக்கு விசாரணை தொடர்பாக மாதம் தோறும் நீதிபதி குழுவிடம் சிபிஐ அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் நெரிசல் வழக்கை SITக்கு மாற்றிய வழக்கை கிரிமினல் ரிட் வழக்காக விசாரித்தது எப்படி என்றும் உச்சநீதிமன்றம் விளக்கம் கேரரியுள்ளது.
சிபிஐ விசாரிக்க உத்தரவு
கரூரில் கடந்த மாதம் 27 திகதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நிதிமன்றம் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மேல்முறையீடு செய்திருந்தார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்கக்கோரியும் பாஜக மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தினை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கரூர் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
