தமிழ் இனத்திற்கே துரோகம் செய்யும் அரசியல் தலைமைகள்: கருணாநிதி ஆதங்கம்
சிங்கள தலைவர்களுடன் கைக்கோர்த்துக் கொண்டு இலங்கை தமிழர்களுக்கு தமிழ் தலைமைகள் துரோகம் செய்கிறார்கள், இவர்கள் ஈழத்தமிழர்கள் போர்வையில் இருக்கும் ஈனத்தமிழர்கள் என எமது தலைமுறை கட்சியின் தலைவர் கருணாநிதி குற்றம்சாடியுள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் தலைமைகளின் அலட்சியம்
தமிழர் இனத்திற்கு சேவை செய்வதாக கூறி, ஆட்சிக்கு வந்த தமிழ் தலைவர்கள் வந்த வேலையை மறந்து, சிங்கள தலைவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.
அந்த வகையில், சாணக்கியன், சுமந்திரன் இருவரும் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவானவர்கள், இவர்களை இனியும் நம்புவதில் நியாயம் இல்லை. இவர்களில் சிறீதரன் மாத்திரம் தான் தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்.

அதே போன்று மக்களுக்கு டிஜிட்டல் மயமாக்கல் மூலம் உதவிச் செய்வதாக கூறும் மனோகணேசனும் அப்படி தான். மேல் மாகாணத்தில் அரசியல் தலைவராக இருந்து கொண்டு மலையக மக்களுக்கு காணி வாங்கிக் கொடுப்பதாக கூறுகிறார். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து. மேலும், ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்த பொழுது தமிழ் தலைமைகளில் பெரும்பாலானவர்கள் அவருக்கே வாக்களித்துள்ளனர்.
ரணில் வாக்களித்தவர்களுக்கு நன்றி எனக் கூறி போது இவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். அப்படியென்றால் வாக்களித்தவர்களில் தமிழ் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். கூடிய விரைவில் எதிர்க்கட்சி தலைவராக நாமல் ராஜபக்ச வருவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. அத்துடன், எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் வீணாகக் குரல் கொடுக்காமல் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டினால் நன்றாக இருக்கும்.
நீங்கள், சம்பாதித்து வைத்திருக்கும் பணத்தைக் கொண்டு மக்களுக்கு உதவினால் உங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில், லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் வேறு என்னென்ன விடயங்கள் பேசப்பட்டிருக்கிறது என்பதினை காணொளியில் பார்க்கலாம்.
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri