கார்த்திகை மலர் பொறிக்கப்பட்ட பாதணிகள்: அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி

Sri Lankan Tamils Mullivaikal Remembrance Day Sri Lanka
By Shan May 30, 2024 12:15 PM GMT
Report

கார்த்திகை மலர் மிதிபடும் ஒன்றாக்கியதன் மூலம் தமிழர்களின் அரசியலை மிதித்தழிப்போம் என பகிரங்கமாகவே கர்ஜிப்பதாகவே உள்ளது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் (M.Sakthivel) தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (30.05.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை

தமிழர்களின் அரசியல் அடையாளங்கள்

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கையின் பிரபல பாதணி உற்பத்தி நிறுவனமான டி.எஸ். ஐ நிறுவனம் அண்மையில் சந்தைப்படுத்தியுள்ள தனது உற்பத்தி ஒன்றில் கார்த்திகை மலரை பதிவிட்டுள்ளது.

இது இலங்கையின் பேரினவாத அரசியல் முதலாளித்துவத்தினையும் எந்த அளவிற்கு ஆக்கிரமித்துள்ளது என்பதை காட்டுகின்றது.

karthikai-flower-embroidered-footwear-m-satthivel-

அத்துடன் தமிழர்களின் அரசியல் அடையாளங்களில் ஒன்றான கார்த்திகை மலரை, மிதிக்கப்படும் ஒன்றாக்கியதன் மூலம் தமிழர்களின் அரசியலை மிதித்தழிப்போம் என பகிரங்கமாகவே கர்ஜிப்பதாக உள்ளது.

இதனை வன்மையாக கண்டிப்பதோடு தமிழ் உணர்வு மிக்க தேசப்பற்றார்கள் இதற்கு தகுந்த பாடத்தை வெளிப்படுத்த வேண்டும்.

யாழ். தெல்லிப்பழையில் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டி ஒன்றில் இம் மலர் அலங்காரத்துக்கு பாவிக்கப்பட்ட போது அப்பாடசாலையில் அதிபர் உட்பட ஆசிரியர்களை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தினர். 

karthikai-flower-embroidered-footwear-m-satthivel-

இதே போன்று மேற்படி குறித்த பாதணி நிறுவனத்தின் திட்டமிடல் வடிவமைப்பு சந்தைபடுத்துனர்கள் விற்பனை முகவர்கள் என பலதரப்பினரையும் பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்துவார்களா? சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ள பாதணிகளை மீளப்பெற அதிகாரத்தை பயன்படுத்துவார்களா? என பொலிஸ் மா அதிரை கேட்கிறோம்.

பௌத்த பேரனவாதத்தின் அரசியல்

கடந்த ஒரு கிழமைக்கு முன்னர் கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்ட போது சுகாதாரத்தை காரணம் காட்டி அதனை தடுத்து நிறுத்தி அடவாடித்தனம் புரிந்த பொலிஸார் அதற்கடுத்து கடந்த கிழமை வெசாக் பண்டிகை காலத்தில் அதே சுகாதாரத்தை காரணம் காட்டி எந்த ஒரு உணவு பகிர்வுகளையும் தடுத்து நிறுத்தியதாகவும் அடவாடித்தனம் புரிந்ததாகவும் செய்திகள் வரவில்லை.

இது தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்கள பௌத்தர்களுக்கு ஒரு நீதி எனும் பௌத்த பேரனவாதத்தின் அரசியலை வெளிப்படுத்தியது.

karthikai-flower-embroidered-footwear-m-satthivel-

ஒரு உற்பத்தி நிறுவனம் தன்னுடைய நீண்ட கால கள ஆய்வில் மக்களின் மனநிலையை அறிந்த பின்னரே உற்பத்தியினை வடிவமைக்கும் என்பதுடன் சந்தையிலும் விற்பனைக்கு விடும்.

அவ்வாறெனில் டி. எஸ்.ஐ நிறுவனத்தில் நீண்ட கால திட்டமிடலின் அடிப்படையில் காலனியில் கார்த்திகை மலரை அடையாளப்படுத்தி உற்பத்தி செய்து சந்தைப்படுதைக்கு விட்டுள்ளது எனில் இலாபத்திற்கு அப்பால் அதன் அரசியல் நோக்கம் தெளிவானது.

தமிழர்களை அடக்கி ஒடுக்கி அரசியல் ரீதியாக துவம்சம் செய்வோம் எனும் பேரினவாத மனநிலையை மக்கள் மயப்படுத்தி தமது அரசியல் கூலித்தன்மையை வெளிப்படுத்தி உள்ளது எனலாம்.

karthikai-flower-embroidered-footwear-m-satthivel-

அரச திணைக்களங்கள், சிங்கள பௌத்த பிக்குகள் தமது பேரினவாத செயற்பாட்டுக்குள் இழுத்து தமிழர்களின் நிலைகளை பறித்து ஆக்கிரமிக்கும் ஆட்சியாளர்கள் தனியார் உற்பத்தி நிறுவனங்கள் வேலைத் தளங்கள் என்பவற்றையும் தமது அரசியலுக்கு பாவிக்க தொடங்கிவிட்டனர் என்பதையே டி. எஸ். ஐ நிறுவனம் வெளிப்படுத்தி உள்ளது.

பேரினவாதம் பலம் வாய்ந்த ஒன்றாக கட்டமைக்கப்பட்டு பல்வேறு முகங்களில் கிளைகளை பரப்பி சிங்கள பௌத்த அரச மரம் போல் வியாபித்திருக்கின்றது என்பதை நாம் உணர வேண்டும். 

தமிழர் தேசிய கொள்கை

இதற்கு தமிழர் தேசிய கொள்கை உருவாக்கிகள், பரப்புரையாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர் எவ்வாறு பதில் அளிக்க போகின்றனர்?

தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள் ஒன்றிணைய வேண்டும், மக்கள் திரட்சி கொள்ள வேண்டும், அடுத்த தேர்தலுக்கு மக்களை ஆயத்தப்படுத்த வேண்டும் என்று கூறுவார்கள் உடனடியாக பாதணி விடயத்தில் தலையிட்டு அரசுக்கும் நிறுவனத்திற்கும் தமது எதிர்ப்பினை வடகிழக்கு தழுவிய ரீதியில் வெளிக்காட்டுதல் வேண்டும்.

karthikai-flower-embroidered-footwear-m-satthivel-

எமது எதிர்ப்பு பாதணிக்கும், பாதணி நிறுவனத்திற்கும் எதிரானது மட்டுமல்ல. அது அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலுக்கும் அதன் சக்திகளுக்கும் எதிரானதுமாகும். 

பல இலட்சம் உயிர்கள் எமது அரசியலுக்காக கொல்லப்பட்ட பின்னரும் எமது அரசியலை கைவிடாத தேசமாக ஒன்று திரண்டு எதிர்ப்பு காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இந்த சந்தர்ப்பத்திலும் அமைதி காப்போம் எனில் எமது அரசியலுக்கு நாமே எதிரிகளாவோம்” என தெரிவித்துள்ளார்.

திரையிடப்பட்ட யாழ். பொது நூலக எரிப்பு தொடர்பான ஆவணப்படம்: விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை

திரையிடப்பட்ட யாழ். பொது நூலக எரிப்பு தொடர்பான ஆவணப்படம்: விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை

கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US