தேவி ஸ்ரீ காப்பாரூர் ஆதிபராசக்தி ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா
மலேசியா செந்தோசா காப்பார் சிலாங்கூர் அருள்மிகு தேவி ஸ்ரீ காப்பாரூர் ஆதிபராசக்தி ஆலய நூதன புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிசேக பெருவிழா எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இதற்கமைய, திங்கட்கிழமை (08) காலை 7 மணிக்கு பூர்வாங்க விக்னேஸ்வர பூஜை, பிரதிஷ்ட மகா சங்கல்பம், கோபுர கலச ஸ்தாபனம், ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம், தீபாராதனை, விபூதி பிரசாதம் வழங்கல் ஆகியன இடம்பெறவுள்ளன.
விசேட பூஜைகள்
மேலும், 09ஆம் திகதி ஸ்ரீ லலிதா ஹோமம், புனித மண் எடுத்தல், புனித தீர்த்தம் எடுத்தல், மாலை அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்பலங்காரம், முதற்கால யாகபூஜை, ஆதிபராசக்தி மந்திர நூல் பாராயணங்கள் ஆகியன நடைபெறவுள்ளன.
மேலும், எதிர்வரும் 12ஆம் திகதி முதல் கும்பாபிசேக பெருவிழா நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |