கபில சந்திரசேனவிற்கு நீதிமன்றம் விதித்துள்ள முக்கிய தடை!
சிறிலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கபில சந்திரசேன விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், குறித்த வழக்கானது இன்று(5.5.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வெளிநாட்டுப் பயண தடை
இதன்படி, சந்தேகநபரை 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் நீதவான் தடை விதித்துள்ளார்.
இந்த வழக்கு கடந்த 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரான கபில சந்திரசேன சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்னவினால் இந்த பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
பிணைக் கோரிக்கை
அந்தப் பிணைக் கோரிக்கைக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் முன்னிலையானஅதிகாரிகள் அன்றைய தினம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், பிணைக் கோரிக்கை தொடர்பான உத்தரவை இன்று முற்பகல் அறிவித்தார்.
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan