தொடரும் கபில சந்திரசேனவின் மரண விசாரணை..! அரவிந்த டி சில்வாவின் மனைவி மூலம் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்

SriLankan Airlines Crime Death Law and Order Kapila Chandrasena
By Shadhu Shanker May 29, 2026 10:31 AM GMT
Report

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவின் மர்ம மரணம் தொடர்பான விசாரணை இன்று(29) கொழும்பு கோட்டை  நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன மற்றும் சட்டத்தரணி உதர முஹந்திரம் ஆகியோரை சாட்சிகளாக அழைக்க வேண்டுமா என்பது குறித்து ஜூன் 2ஆம் திகதி தீர்மானம் எடுக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த அரசைக் கவிழ்க்க எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆதரவளிக்க மாட்டேன்! பொன்சேகா திட்டவட்டம்

இந்த அரசைக் கவிழ்க்க எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆதரவளிக்க மாட்டேன்! பொன்சேகா திட்டவட்டம்

கபில சந்திரசேன மரண விசாரணை

நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணை நடைபெற்றபோது, இரு சட்டத்தரணிகளும் நீதிமன்றத்தில் முன்னிலையானார்கள்.

அவர்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்,  “ஊடகங்களில் வெளியான செய்திகளுக்குப் பிறகு நீதிமன்றத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் மட்டுமே அவர்கள் வந்துள்ளனர். இதுவரை எந்த அழைப்பாணையும் வழங்கப்படவில்லை” என்று கூறினார்.

தொடரும் கபில சந்திரசேனவின் மரண விசாரணை..! அரவிந்த டி சில்வாவின் மனைவி மூலம் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் | Kapila Chandrasena Death Inquiry

இலங்கை வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜீவ் அமரசூரிய, “வழக்கறிஞர்களுக்கும் அவர்களின் கட்சிக்காரர்களுக்கும் இடையிலான ஆலோசனைகள் இரகசியமானவை.

ஆகவே குற்றவியல் நடைமுறைச் சட்டம் 370(5) கீழ் அவர்களின் சாட்சியம் உண்மையில் தேவையா என்பதை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து நீதவான் பொலிஸாரிடம் கேட்டபோது, இரு சட்டத்தரணிகளிடமிருந்தும் ஏற்கனவே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர். 

சர்ச்சையை ஏற்படுத்திய பல்லேகம ஹேமரத்ன தேரர் விவகாரம்! அரசியல் சூழ்ச்சியென்கிறார் ராகுல தேரர்

சர்ச்சையை ஏற்படுத்திய பல்லேகம ஹேமரத்ன தேரர் விவகாரம்! அரசியல் சூழ்ச்சியென்கிறார் ராகுல தேரர்

இடம்பெற்றுள்ள உரையாடல்

மேலும், கபில சந்திரசேன மே 6ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும்,  ஆனால் மே 7ஆம் திகதி அவருக்கு எதிராக புதிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

அதே நாள் மாலை, ஒரு குழுவினர் முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் வீட்டிற்கு சென்றதாகவும், பின்னர் ரியென்சி அர்சகுலரத்னவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தொடரும் கபில சந்திரசேனவின் மரண விசாரணை..! அரவிந்த டி சில்வாவின் மனைவி மூலம் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் | Kapila Chandrasena Death Inquiry

சந்திரசேனவுக்கும் ரியென்சி அர்சகுலரத்னவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல், அரவிந்த டி சில்வாவின் மனைவியின் கைபேசி மூலம் நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த உரையாடலில் என்ன பேசப்பட்டது என்பதை தற்போது புலனாய்வாளர்கள் கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும், சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி அழைப்புப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் தொடர்வதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

இரு சட்டத்தரணிகளையும் சாட்சிகளாக அழைக்க வேண்டுமா என்பது குறித்த இறுதி முடிவு ஜூன் 2ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதவான் தெரிவித்துள்ளார்.

கபில சந்திரசேன மரணத்தில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பம்... விஷம் வைத்து கொலை!

கபில சந்திரசேன மரணத்தில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பம்... விஷம் வைத்து கொலை!

You May Like This..


மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US